இளம்பெண் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி அடைந்த போலீசார்!

சென்னை தண்டையார்பேட்டையில் நவரத்தன்சிங் என்பவர் நகை கடை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அங்கு வந்த 25 வயது நிறைந்த இளம்பெண்ணும், 50 வயது இறந்த நபரும் பழைய கம்மல் ஒன்று இருப்பதாகவும், அதற்கு பதிலாக புதிய கம்மல் வாங்க வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது கடையில் உள்ள கம்மல்களை காட்டியுள்ளார். இந்நிலையில் அப்பெண் 6 கிராம் எடையுள்ள தங்க நகையை வாங்கிக்கொண்டு, அதற்கு பதிலாக 7 கிராம் கொண்ட பழைய கம்மலை கொடுத்துவிட்டு அவசர அவசரமாக சென்றுள்ளார்.

இந்நிலையில் திடீரென இவர்கள் மீது சந்தேகம் அடைந்த நிலையில் கடை ஊழியர் அந்த நகையை சோதனை செய்து பார்த்துள்ளார் அப்பொழுது அது கவரிங் என தெரியவந்தது.

இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, டெல்லியை சேர்ந்த கிசன்லால், அவரது மகன் சஞ்சய், சோனுக்குமார், அவரது மனைவி லதா ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, தமிழகத்தில்தான் அதிகம் நகைகளை பயன்படுத்துவர். மேலும் சென்னையில் கவரிங் நகைகளை கொடுத்துவிட்டு, தங்க நகைகளை எளிதில் மாற்ற முடியும் எனவேதான் இங்கு வந்தோம். ஆனால் வகைகள் எல்லாவற்றையும் மாற்றுவதற்குள்உங்களிடம் மாட்டி கொண்டோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.