ஆண்கள் பெண்களின் மீது வயப்படாமல் இருக்க பெண்களுக்கு நடைபெற்ற கொடூரம்.!

இந்த உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் மற்றும் கொடூர கொலைகள் அரங்கேறி வருகிறது. இதனால் பல பெண்கள் தங்களின் வாழ்க்கையை இழந்தும்., சந்தோசத்தை துளைத்தும் செய்வதறியாது இருந்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு அவர்களின் மார்பக கவர்ச்சியின் காரணமாக அவர்கள் பிற ஆண்களால் கவரப்படுகின்றனர் என்ற நம்பிக்கையானது பிரிட்டிஷ் நாட்டில் தற்போது நிலவி வருகிறது. இதனால் அவர்களின் மார்பகங்களின் இயற்கை வளர்ச்சியை கட்டுப்படும் நடவடிக்கையில் அங்குள்ள பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செய்த கொடூரமானது தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் குறிப்பிட்ட மக்களிடம் இருந்த இந்த பழக்கமானது நீண்ட காலமாக பிரிட்டிஷ் நாட்டில் உள்ள பகுதியில் நடைமுறையில் இருந்ததை அறியாமல் இருந்த நிலையில்., இந்த தகவல் வெளியாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல்பாட்டில் பிரிட்டிஷ் நாட்டில் இருக்கும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் மார்பங்களின் இயற்கை வளர்ச்சியை கட்டுப்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

மார்பகங்களின் வளர்ச்சியை குறைப்பதற்கு மருத்துவமனைக்கு சென்றால் அதிகளவில் பணம் செலவாகும் என்ற காரணத்தால்., பெண்களின் சிறுவயதில் இருந்து சூடான கற்களை மார்பகத்தின் மீது வைத்து வளர்ச்சியை குறைத்துள்ளனர். இது குறித்து இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட சீமோன் என்ற பெண் அளித்த செய்தியானது., பிற ஆண்கள் யாரும் என்னை பார்க்க கூடாதென்று 13 வயதாக இருக்கும் சமயத்தில்., சூடான கற்களின் மூலமாக எனது மார்பக வளர்ச்சியை கட்டுப்படுத்தினர்.

மனிதருக்கு இருக்கும் இயற்கையான வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில்., எனது கைகால்களை பிடித்துக்கொண்டு சூடான கற்களை எடுத்து மார்பகத்தின் மீது வைத்து அழுத்தத்தை கொடுப்பார்கள். இதனால் கடும் வலியை நான் அனுபவித்துள்ளேன். நமது உடலிலேயே சூடான கற்களை வைத்து அழுத்தும் நிகழ்வை சிந்தித்து பார்த்தால் எனது துயரம் உங்களுக்கு புரியும்.

இதுமட்டுமல்லாது இறுக்கமான பெல்ட்டுகளின் உதவியுடன் மார்பகத்தில் கற்களை வைத்து கட்டி அழுவார்கள்., இதனால் ஏற்பட்ட வலியும் மூச்சுத்திணறலும் நான் அனுபவித்த கொடூரங்கள். இதனால் ஏற்படும் உடற்பாதிப்புகளால் கடுமையான அவதியடைந்த எனக்கு., கட்டாய திருமணம் செய்து வைத்தனர். எனது குழந்தைக்கு கூட தாய்ப்பால் சரியான முறையில் வழங்க முடியாத சூழலில் தவித்து வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இதே போன்ற தொடர் கொடூரங்களால் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்., இந்த நிகழ்வை அறிந்த அரசு இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்த பள்ளி பாடத்திட்டத்தில்., விழிப்புணர்வு குறித்த தகவலை சேர்க்கவும் முடிவு செய்துள்ளது.

பெண் குழந்தைகள் பிறந்தாலே செலவு., அவர்களை வளர்த்து ஆளாக்கி வரன் முடித்து தருவதற்குள் ஏற்படும் பிரச்சனை., வளரும் நேரத்தில் ஏற்படும் பிரச்சனை என்று பல பிரச்சனைகளின் காரணமாக கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த கொடூரத்தில் இருந்த மீண்டு வந்த நிலையில்., மற்றொரு நாட்டில் நடைபெறும் பிரச்சனையாக இந்த தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.