சமந்தா கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த நாக சைதன்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துவருகிறார். திருநங்கை கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா.

மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மேலும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ் இந்த படத்தின் சென்சார் செர்டிபிகேட் தரப்பட்டுள்ளது.அதில் A சான்றிதழ் தந்துள்ளனர்.

சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தா கூறியவை, “சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் கூறும் போது என்னை அதிர்ச்சியாக பார்த்தார். ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்று கூறினார்.