மேகன், திருமணத்திற்கு வராததால் கோபமா? பிரியங்கா சோப்ரா

பிரித்தானிய இளவரசி மேகன் ஒரு நடிகையாக இருந்த காலத்திலிருந்தே அவரது நெருங்கிய தோழிகளில் ஒருவராக இருந்த பிரியங்கா சோப்ராவின் திருமணத்தில் மேகன் கலந்து கொள்ளததால் அவர் மீது கோபமா என்ற கேள்விக்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார் அவர்.

பிரியங்கா சோப்ராவும் இளவரசி மேகனும் நல்ல தோழிகள். இமெயில் வழியாக தொடர்பிலிருப்பதும், அருகருகே உள்ள இடங்களில் நடிக்கும்போது தவறாமல் சந்தித்துக் கொள்வதுமாக இருந்த நட்பில் பிளவு என்பது போல் செய்திகள் வெளியாகி வந்தன.

அதற்கேற்றாற்போல், பிரியங்கா சோப்ராவின் திருமணத்தில் மேகன் கலந்து கொள்ளவில்லை.

மேகன் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சியில் அவரது நெருங்கிய தோழிகள் கலந்து கொண்டபோது பிரியங்கா சோப்ரா மட்டும் அதில் கலந்து கொள்ளவில்லை.

இதனால் இருவரது நட்பில் பிரச்சினை, பிரியங்கா, மேகன் மீது கோபமாக இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரியங்கா சோப்ரா, இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அந்த பிரபல தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தவர், உங்கள் திருமணத்திற்கு மேகன் வராததால் உங்களுக்கு கோபம் அப்படித்தானே, அந்த கோபத்தினால்தான் நீங்கள் அவரது வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை இல்லையா? என கேள்விக்கணைகளை சரமாரியாக தொடுக்க, சற்றும் சளைக்காத பிரியங்கா மாறாத புன்னகையுடன், இல்லை அது உண்மையில்லை என்றார்.

ராஜ தம்பதிகள் இன்னொரு நாட்டிற்கு வருவது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் பிரியங்காவும், தான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகம் தொடர்பாக பல கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததாலேயே, அவர் இருந்த இடத்திலிருந்து பல மைல்கள் தொலைவில் நடந்த மேகனின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.