நடிகை வடிவுக்கரசி வீட்டில் நிகழ்ந்த பெரும் சோகம்!!

வடிவுக்கரசி 1980-களில் ‘கன்னிப்பருவத்திலே’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். பல படங்களில் நடித்துள்ள இவர் இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் அதிகம் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். வடிவுக்கரசியின் வீடு சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது.

இவரது மகள் வீடும் தி.நகரிலேயே மற்றொரு பகுதியில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 10-ம் தேதி வடிவுக்கரசி வீட்டைப் பூட்டி விட்டு தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஒரு வாரங்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீடு திரும்பிய நடிகை வடிவுக்கரசிக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருந்துள்ளது. அவரது வீட்டில் மொத்தம் 8 பவுன் நகைகளும் ரூ. 2 லட்சம் பணமும் திருடு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடிவுக்கரசி சகோதரர் அறிவழகன் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.