வயல் வெளி., சுத்தமான காற்று.! திடீரென வீசிய துர்நாற்றம்! வெளியான அதிர்ச்சி தகவல்.!!

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் சேலையூர் கோவிலென்சேரி பகுதியை சார்ந்தவர் குணசேகரன் (54). இவருக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில் மாடுகளை வைத்து பராமரித்து கொண்டு வருகிறார். இவரின் இல்லத்திற்கு கடந்த ஜனவரி மாதத்தின் போது விழுப்புரத்தை சார்ந்த தேவி என்கிற 25 வயதுடைய பெண் தனது கணவரிடம் சண்டையிட்டு வந்துள்ளேன்., ஏதேனும் வேலை இருந்தால் தருமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து அங்குள்ள விவசாய நிலம் மற்றும் மாடுகளை பராமரிப்பதற்கு தங்கியிருந்து பணிகளை கவனித்து கொள்ளுமாறு பணியமர்த்தியுள்ளார். இந்த நிலையில்., கடந்த மூன்றாம் தேதியன்று வந்த வாலிபர் ஒருவர் தேவியின் கணவர் தான் என்றும்., தேவியை ஊருக்கு அழைத்து செல்ல வந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். அவருடன் தேவி செல்ல மறுத்ததை அடுத்து இருவரையும் தங்கி பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளார்.

இவர்கள் இருவரும் அங்கு தங்கியிருந்த நேரத்தில் பெரும்பாலும் சண்டை மற்றும் சச்சரவுகளுடன் இருந்த நிலையில்., கடந்த 16 ம் தேதியன்று இருவரும் மாயமாகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து சொல்லாமல் ஊருக்கு சென்றிருப்பார்கள்., எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று எண்ணி குணசேகரன் அது குறித்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

இந்த சூழலில்., நேற்று அங்குள்ள கழிவுநீர் தூதியில் இருந்து பயங்கர துர்நாற்றமானது வீசியுள்ளது. இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கழிவு நீர் தொட்டியை திறந்த போது., அதற்குள் தேவி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த தகவல் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தெரியப்படுத்தவே., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.