ஆரணி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த உமேஷ்குமார், நித்யா தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர். தற்போது எங்கு பார்த்தாலும் பாலியல் தொல்லை தலைவிரித்து ஆடுகிறது. அதிலும் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களே இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவது தான் வருத்தத்திற்கு உரிய விஷயமாக உள்ளது.
இந்நிலையில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியை நித்யா தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாவட்ட ஆட்சியரியம் கணவர் உமேஷ் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தைகள் நல வாரியம் ரகசிய விசாரணை மேற்கொண்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் சில மாணவர்களுக்கு ஆசிரியை நித்யா தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனை உறுதி செய்த குழந்தைகள் நல வாரியம் அந்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆசிரியை நித்யா கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியை நித்யாவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.






