கிணற்றுக்கு குளிக்க சென்ற டாஸ்மாக் ஊழியர் பலி!

உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் கிணற்றில் குளிக்க சென்ற டாஸ்மாக் ஊழியர்  நீரில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்சாமி மகன் தவமணி (38). கடந்த 10 வருடங்களாக டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்த இவர், இன்று கிணற்றுக்கு குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார் .

தகவலறிந்த உத்தப்பநாயக்கணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தவமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக, உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த  சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த உத்தப்பநாயக்கணூர் போலீசார் மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.