மகனை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி.! வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி ஆகிய படங்களை தொடர்ந்து அருண் குமார் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். படம் முழுவதும் சூர்யா நடிக்க உள்ளார்.

சிந்துபாத் படத்தை கே ப்ரொடக்ஷன் சார்பில் ராஜராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது படத்தின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் விஜய் சேதுபதி அவருடைய மகன் சூர்யாவின் முடியை பிடித்து பயங்கரமாக சண்டை போடுகின்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.