ஒரு பெண்ணின் வாக்கிற்காக மலையில் இயந்திரங்களை சுமந்து சென்ற அதிகாரிகள்.!

இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது. இந்த வாக்குபதிவிற்காக இந்திய தேர்தல் ஆணையமானது தனது பணியை இப்போதிலிருந்து துவங்கியுள்ளது. இதற்கான பணியில் தொடர்ந்து முழுவீச்சில் ஈடுபட்டு வரும் வேளையில் ஒரேயொரு பெண்ணின் வாக்கிற்காக வாக்குசாவடியை இந்திய தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

இந்திய – சீன எல்லையில் இருக்கும் மாநிலம் அருணாசலப்பிரதேசம். இந்த மாநிலத்தில் இருக்கும் சீன எல்லைக்கு அருகில் அமைத்துள்ள மலோகம் கிராமத்தில் சில குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தேர்தல் வாக்குபதிவிற்க்காக தங்களின் பெயர்களை அங்குள்ள மாற்ற வாக்குச்சாவடி மையத்தில் சேர்த்து இணைத்துக்கொண்டனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் ஜனில் – தாயங் என்ற தம்பதியினர் கடந்த 2014 ம் வருடத்தில் நடைபெற்ற தேர்தலின் போது தனி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். மேலும்., அப்போதே இவர்கள் இவருக்கென்று தனியாக வாக்குச்சாவடி மையத்தை அமைத்தனர்.

இந்த நிலையில்., ஜனில் தனது வாக்குபதிவிற்க்காக வேறு வாக்குச்சாவடி மையத்திற்கு மாற்றம் செய்திருந்த நிலையில்., தாயங் தனது மையத்தை மாற்றாமல் இருந்தார். இதனை அறிந்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தயாங்கிற்காக மட்டும் வாக்குச்சாவடி மையத்தை அமைத்தனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது., தாயங் என்னும் பெண்மணியின் வாக்குபதிவிற்க்காக வாக்குசாவடியை அமைத்துள்ளோம். காலை சுமார் 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை காத்திருப்போம். அவர்களிடம் சென்று வாக்களிக்க வற்புறுத்த இயலாது என்பதால் காத்திருப்போம் என்று தெரிவித்தார்.

மேலும்., அந்த கிராமத்திற்கு சரியான நடைபாதைகள் இல்லாத நிலையில்., மலையில் வாக்கு இயந்திரங்களை சுமந்தே சென்று வாக்குச்சாவடி மையத்தை அமைத்தனர்.