காவல் துறையினரிடம் லிப்ட் கேட்ட வாலிபர்.! அதிர்ச்சியான காவல் துறையினர்.!

இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் காவல் துறையினர் கண்காணிப்பு அறைக்கு அலைபேசி ஒன்று வந்துள்ளது. மறுபுறம் இருந்து பேசிய வாலிபர் ஏதோ அவசரம் சம்பவ இடத்திற்கு உடனடியாக காவல் துறையினரை அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட காவல் துறை அதிகாரி உடனடியாக சம்பவ இடத்திற்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பதறியபடி விரைந்த காவல் துறையினர் அங்கு இளைஞர் மட்டும் இருப்பதை கண்டு அவரிடம் சென்று விசாரித்துள்ளனர்.

அந்த சமயத்தில் இளைஞர் நான் தான் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் என்று வேறு காரணம் கூறியும் மழுப்பியுள்ளார். இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ள முடிவு செய்த காவல் துறையினர் காரில் ஏற்றி அவரிடம் பேச்சு வழங்கி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதலில் முன்னுக்கு பின்னர் பதில்களை தெரிவித்த இளைஞர் பின்னர் பணம் இல்லாததால் காவல் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்பு கொண்டேன் என்று தெரிவித்தார். இது குறித்த உரையாடல் காட்சியில் இளைஞர் கூறியிருப்பதாவது.,

காவல் துறையின் அவசர உதவி எண்ணான 100 க்கு நான் தான் தொடர்பு கொண்டேன். எனது இல்லமானது அங்குள்ள குந்தூர் பகுதிக்கு அருகில் உள்ள சம்பல் பகுதியில் அமைத்துள்ளது. அவசர எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டால் அவர்கள் அழைத்து செல்லமாட்டார்களா? பேருந்தில் செல்வதற்கு என்னிடம் பணம் இல்லை. வேறு ஏதும் நான் செய்யவில்லை. சிலம் (கஞ்சா) அருந்தினேன்., தற்போது என்னிடம் கஞ்சா அருந்துவதற்கான உபகரணம் மட்டுமே உள்ளது. கஞ்சா இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞர் கஞ்சா போதையில் இருக்கும் நிலையில்., போதை தெரிந்தவுடன் காவல் துறையினர் அவரின் பெற்றோர்கள் குறித்த விசாரணையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த காணொளி காட்சிகளானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.