தெறி பட, விஜய்யின் கைக்குழந்தை எப்படி இருக்காங்க?

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் தெறி. இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சமந்தா எமி ஜாக்சன், ராதிகா, மொட்டை ராஜேந்திரன் என பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் நடிகை மீனாவின் மகள் நைனிகா இந்த படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது.

தெறி படத்தில் விஜயின் பிளாஷ்பேக் கதையில் விஜய் மற்றும் சமந்தாவிற்கு பெண் கைக்குழந்தை இருப்பது போன்று சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதில் கைக் குழந்தையாக நடித்த குழந்தையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.