கார் கண்ணாடியில் ஸ்டிக்கர்.!! பொள்ளாச்சி வழக்கில் அடுத்த அதிர்ச்சி தகவல்.!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சார்ந்த திருநாவுக்கரசு என்பவன் முகநூலின் மூலமாக பெண்களை காதல் வலையில் விழ வைத்து., அவனது சொந்த ஊரில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து., ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

இந்த தகவலானது வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்., இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து திருநாவுக்கரசிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த விசாரணையில் அவன் தெரிவித்தாவது., கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2016 ம் வருடத்தின் போது எம்.பி.ஏ பயின்றேன். கல்லூரியில் மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில்., வட்டி தொழிலில் வந்த வருமானத்தை வைத்து மாணவிகளுக்கும்., தோழர்களுக்கும் ஆடம்பரமாக செலவு செய்து வந்தேன்.

என்னை எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் நம்பிய பெண்களிடம் அலைபேசி எண்ணை வாங்கி சபரிராஜனிடம் வழங்கிய பின்னர்., சபரி பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி., காதல் வலையில் விழ வைத்து சுற்றுலா சென்று வரலாம் என்று கூறி அவர்களை வரவழைப்பார். எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் வரும் பெண்களை ஆட்களே இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவார்.

இதற்கு அடுத்தபடியாக அங்கு நடைபெறும் காட்சிகளை அலைபேசியில் மறைந்திருந்து பதிவு செய்து அதனை அவர்களிடம் காட்டி., அவர்களை மிரட்டி அந்த சமயத்தில் பலாத்காரம் செய்து பின்னர் அதனை காட்டியே நகை மற்றும் பணத்தை பறிப்போம்., மீண்டும் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி மிரட்டி பலாத்காரம் செய்தோம் என்று வாக்குமூலத்தில் தெரிவித்தான்.

இந்த நிலையில்., திருநாவுக்கரசின் இல்லத்தில் மேற்கொண்ட சோதனையில் அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பெண் டிரைவுகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. மேலும்., அந்த வீட்டில் இருக்கும் பெண்களின் அலறல் சத்தம் ஏதும் வெளியே கேட்காமல் இருப்பதற்காக சவுண்ட் பாக்ஸ்களை உபயோகம் செய்ததும்., காரின் கண்ணாடியில் வெளியே இருந்து பார்த்தால் தெரியாத அளவிற்கு ஸ்டிக்கரால் ஒட்டி மறைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான பல தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில்., தற்போது வெளியான தகவலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.