பொள்ளாச்சி பிரச்சனையில் அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி விசாரணை பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் வைத்து வந்த நிலையில்., இந்த வழக்கானது இன்று முதல் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டவுடன் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருநாவுக்கரசின் இல்லத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் 10 அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. நேற்று நீதிபதிகள் முன்னிலையில் குற்றவாளிகள் அனைவரும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்., குற்றவாளிகள் அனைவரையும் நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் அனுமதி கூறி தெரிவித்திருந்தனர்.

இதனை ஏற்ற நீதிபதிகள் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து இவர்கள் அனைவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்., இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி., தற்போது வரை சுமார் 112 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த விசாரணையில்., திருநாவுக்கரசு மற்றும் அவனது நண்பர்கள் பெண்கள் பெயரில் உள்ள போலி முகநூல் கணக்குகளை முதலில் தயார் செய்து அதன் மூலமாக திருமணம் முடிந்த பெண் ஒருவரை பழக்கம் பிடித்து., அவரிடம் அந்தரங்கம் குறித்த விஷயங்களை முதலில் பேச துவங்கி பின்னர் அவரின் புகைப்படங்களை பெற்று., அதனை வைத்தே அவரை மிரட்ட துவங்கியுள்ளனர். அந்த பெண்ணும் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று எண்ணி இவர்களுக்கு பணத்தை வழங்கியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னரே மெல்ல மெல்ல தங்களின் வக்கிர புத்தியை அதிகளவில் உபயோகம் செய்ய துவங்கியுள்ளனர் என்ற தகவலானது வெளியாகியுள்ளது.