மனதை கல்லாகி தாயார் செய்த காரியத்தால் பதறிப்போன கணவன்.!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வீராம்பட்டினத்தை சார்ந்தவர் ஞானவேலு. இவர் மீன் பிடிக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சீதாலட்சுமி (33). இவர்கள் இருவருக்கும் மூன்று மகன்கள் உள்ள நிலையில்., இவர்களின் மூத்த மகனான 15 வயதுடைய லோகேஷிற்கு மனநல பாதிப்பானது இருந்துள்ளது.

இதுமட்டுமல்லாது ஞானவேலுவுக்கும் அவரது குடும்பத்தின் உறவினருக்கும் இடையே சொத்து தகராறு பிரச்சனையானது இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையானது அடிக்கடி நடைபெற்று வந்த நிலையில்., வழக்கம் போல கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவும் தகராறு நடைபெற்றுள்ளது.

இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் வெறுப்படைந்த சீதாலட்சுமி தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளார். இவரின் மூத்த மகன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால்., தனக்கு பின்னர் தனது மகனை கவனிக்க ஆள் இல்லை என்றும் வருந்தியுள்ளார்.

உணவில் விஷத்தை கலந்த சீதாலட்சுமி., தனது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சாப்பாடை வழங்கிவிட்டு மீதமிருந்த உணவை சாப்பிட்டு மயக்க நிலையில் இருந்துள்ளார். வீட்டிற்கு வந்த ஞானவேலு தனது மனைவி மற்றும் மகன் சுயநினைவின்றி இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். இவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதமாக இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.