பங்களாதேஷத்தின் ‘மர மனிதர்’ !

பங்களாதேஷத்தின் ‘மர மனிதர்’ அப்துல் பஜந்தர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்!

பங்களாதேஷத்தின் குல்னா பகுதியை சேர்ந்தவர் அப்துல் பஜந்தர். எபிடெர்மோடிஸ் ப்ளாசியா வெருசிஃபோர்மிஸ் எனப்படும் அரிய வகை தோல் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இளைஞரது கை விரல்கள் மரத்தில் இருந்து பட்டைகள் உருவாவது போன்று தடிமனாக நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் உள்ளன.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரை டாக்கா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதித்து வங்காள அரசு அவரை கடந்த 2016-ஆம் ஆண்டு குனப்படுத்தியது. இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் குறைய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தோல் புற்றுநோய்க்கு வித்திடும் இந்த அரிய வகை நோய் உலகில் நான்கு பேருக்கு மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பஜந்தருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சமந்தா லால் சென் தெரிவிக்கையில், தற்போது பஜந்தர் டாக்கா மருத்துவமனையின் தீகாய பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த ஆண்டு பஜந்தருக்கு சிகிச்சை அளித்த 9 மருத்துவர்கள் கொண்ட குழு, தற்போது மீண்டும் இணைந்து சிகிச்சை அளித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பஜந்தரின் உடலில் உள்ள மரம் போன்ற மரு பகுதிகளை நீக்க கடந்த 2016-ஆம் ஆண்டு துவங்கி 25 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.