முதல்முறையாக ஒரு பெண்னை கற்பழித்ததாக மற்றொரு பெண் கைது!

இந்தியாவில் முதல்முறையாக ஒரு பெண்னை கற்பழித்ததாக மற்றொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்!

ஆம்., வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த 25-வயது பெண் ஒருவரை, 19-வயது மதிக்கத்தக்க டெல்லி பெண் வன்புணர்வில் ஈடுபடுத்தியதாக டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. பாலியல் பொம்மைகளை கொண்டு பாதிக்கப்பட்ட பெண்னை வன்புணர்வில் ஈடுப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் IPC பிரிவு 377-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் தனது சொந்த ஊரில் இருந்து டெல்லி தஞ்சம் புகுந்து வேலை தேடி வந்துள்ளார். தனி வீடு ஒன்று எடுத்து தங்கி வேலை தேடி வந்த பெண்ணை 4 பேர் கொண்ட குழு கூட்டு வண்புனர்வில் ஈடுப்படுத்தியுள்ளது.

இந்த குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்களின் 3 பேர் ஆண் எனவும், ஒருவர் மட்டும் பெண் எனவும் தெரிகிறது. சம்பவத்திற்கு பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்து 3 ஆண்களுக்கும் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். எனினும் மீதமிருந்த பெண்ணுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லை. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியதாக மற்றொரு பெண்ணை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என கூறி காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

இதற்கிடையில் செப்டம்பர் 6-ஆம் நாள் ஓரின சேர்க்கைக்கு(LGBT) எதிரான சட்டப்பிரிவு 377-னை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதனையடுத்து இந்த சட்ட பிரிவினை கொண்டே டெல்லி கூட்டு பலாத்கார சம்பவத்தில் தன்னை பலவந்தம் செய்த பெண்ணுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட டெல்லி இளம்பெண் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.