உள்ளாடையுடன் விமானம் ஏறிய பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!

உள்ளாடை போல் தோற்றமளித்த உடையுடன் விமானம் ஏறிய பிரித்தானிய இளம்பெண் ஒருவரை, விமான ஊழியர்கள், ஒழுங்காக உடலை மூடும்படி உடையணி, அல்லது வெளியே போ என சத்தமிட்டதையடுத்து அந்த பெண் அதிர்ச்சிக்குள்ளானார்.

பர்மிங்காமை சேர்ந்த Emily O’Connor (21), Tenerife செல்வதற்காக விமானம் ஏறினார்.

பயணிகளை வரவேற்பதற்காக விமானதிற்குள் நிற்கும் பணிப்பெண்கள் உட்பட்ட விமான ஊழியர்கள், Emilyயிடம் உங்கள் உடை சரியாக இல்லை, நீங்கள் மற்ற பயணிகளை அசௌகரியமாக உணரச் செய்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

உடனே Emily மற்ற பயணிகளிடம், நான் யாரையாவது தூண்டும் விதத்தில் உடையணிந்திருக்கிறேனா என்று கேட்க, யாரும் ஒன்றும் கூறவில்லையாம்.

என்றாலும் விமான ஊழியர்களில் ஒருவர், உடலை மூடு, அல்லது விமானத்தை விட்டு கீழே இறங்கு என்று கத்த, Emily நடுங்கிப் போனாராம்.

இந்த சம்பவத்தை ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்ட Emilyக்கு பலரும் பல்வேறு வகையில் பதிலளித்திருக்கிறார்கள்.

ஒருவர், இந்த பெண்ணுக்கு விமான நிறுவனம் விளக்கம் கொடுப்பதோடு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இன்னொரு பெண்ணோ, நீங்கள் உள்ளாடையுடன் பயணிப்பதை பலரும் விரும்புவதில்லை, உடலை மூடச் சொல்வதற்கு விமான நிறுவன கொள்கைகள் எல்லாம் தேவையில்லை என்று கூற, உடனே Emily, இது உள்ளாடை ஒன்றும் இல்லை, இது பிரபல நிறுவனத்தில் வாங்கிய டாப்ஸ் என்று அசடு வழிந்திருந்தார்.

அந்த குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் உடை கொள்கையின்படி, முறையான உடை அணியாதவர்கள், அதை மாற்றும் வரையில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இந்த சம்பவத்தை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க முடியும், பொதுவாகவே எல்லா விமான நிறுவனங்களிலும் உடை கொள்கை உள்ளதுதானே, என்றாலும் Emilyயை நடத்திய விதத்திற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

ஆனாலும், உறவினர் ஒருவரிடமிருந்து வேறொரு சட்டையை வாங்கி அணிந்தபின்னரே Emily விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இணைப்பு

இந்நிலையில், உள்ளாடையுடன் விமானம் ஏறியதற்காக அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்த Emily அதே உடையுடன் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அப்போது அவரை பேட்டி கண்ட ஒரு தொகுப்பாளர், அவரை பிடித்து திருப்பி, ‘இது மேலாடை அல்ல, இது உள்ளாடைதான்’ என்று கூற, Emily ஒன்றும் கூற இயலாமல் தவித்துள்ளார்.

இதற்கிடையில், முன்பு Emilyக்கு ஆதரவு தெரிவித்து வந்த ட்விட்டர் வாசகர்கள் பலரும்கூட, இப்போது, அது மேலாடை அல்ல உள்ளாடைதான் என்று கூறத் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.