பெண்ணை தாக்கிய காணொளி மட்டும் வெளியாகியிருந்தால்…!! அடுத்த அதிர்ச்சி சம்பவம்.!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இந்த விஷயம் தொடர்பான பல விஷயங்கள் தொடர்ந்து விசாரணையில் வெளிவரும் நிலையில்., பொள்ளாச்சி சினப்பம்பாளையத்தில் இருக்கும் திருநாவுக்கரசின் வீட்டின் அருகே உள்ள இருக்கும் நபர் இது குறித்து தெரிவித்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது., இந்த பிரச்சனைக்கு பின்னரே இந்த இல்லத்தில் நடந்த அனைத்து துயர சம்பவங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீட்டை சுற்றிலும் பெரும்பாலும் யாரும் இறக்கமாட்டார்கள் என்பதால் இந்த வீட்டில் நடந்த விஷயம் ஏதும் வெளிவர வாய்ப்பில்லை. இந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் வழக்கத்தை திருநாவுக்கரசு வந்து செல்லும் வழக்கத்தை வைத்துள்ளான்.

அவ்வாறு வரும் திருநாவுக்கரசு தந்து நண்பர்களுடன் மது அருந்தி விட்டு செல்லும் பழக்கத்தை வைத்துள்ளான் என்று நினைத்த எங்களுக்கு., இது போன்று பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விட்டான் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் இந்த இல்லத்திற்கு வரும் சமயத்தில் ஒவ்வொரு பெண்களை அழைத்து வருவான். திருநாவுக்கரசின் தந்தைக்கு இரண்டாம் மனைவியின் மகனான இவன்., பெற்றோருக்கு தெரியாமலேயே வட்டி தொழில் செய்வான் என்று எதிர்பார்த்திருந்த வேளையில்., பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வந்துள்ளான்.

மேலும்., திருநாவுக்கரசு மற்றும் அவனது நண்பர்கள் சபரி., தினேஷ்., வசந்த் ஆகியோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சாலையில்., இவர்களின் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்ற பெண்ணை தாக்கி., மீண்டும் காரில் அடித்த படியே அழைத்து சென்றுள்ளனர். இதனை கவனித்த முதியவர் பதறியபடி அலைபேசியில் விடியோவாக பதிவு செய்ய முயற்சித்த போது., அவர் சுதாரித்து காட்சியாய் பதிவு செய்வதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

அன்றே காணொளி பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வெளிவந்திருந்தால்., கடந்த ஒரு மாதத்தில் இவர்களின் பிடியில் இருந்து சில பெண்களாவது தப்பியிருப்பார்கள். பாவம் அந்த பெண்கள்., தங்களுக்கு நேர்ந்த பெரும் கொடுமையை வெளியில் சொல்ல இயலாமல் தவித்திருப்பது அவர்களின் மனதிற்கு மட்டும்தான் தெரியும். பெரும்பாலும் பெண்கள் தங்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி மானத்தை எண்ணி அவர்கள் அஞ்சியிருக்கலாம் மற்றும் பிற பெண்கள் இன்னும் பெற்றோருக்கு கூட தெரியப்படுத்தாமல் இருக்கலாம். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையை எண்ணினால் பெரும் மனவேதனையை தருகிறது என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.