காமகொடூரங்களுக்கு உடந்தையாக இருந்த பெண்! யார் அவர்?

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் சமூகவலைத்தளங்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவத்தில் தலைவனாக செயல்பட்டவர் திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு பணபலம் அதிகம். அதனால் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவருக்கு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவருடன் படித்த தோழி மூலம் பல இளம்பெண்களின் பழக்கம் ஏற்பட்டது. மேலும் பல பெண்களின் செல்போன் எண்களையும் கொடுத்து அந்த பெண் திருநாவுக்கரசுக்கு உதவியுள்ளார்.

அதனை தொடர்ந்து திருநாவுக்கரசு இளம்பெண்களை மிக எளிதாக மயக்கி காதல் வலையில் வீழ்த்திஉள்ளார். மேலும் பேஸ்புக் மூலம் பல இளம்பெண்களின் செல்போன் எண்ணை பெற்று அவர்களுடன் பேசி மயக்கியுள்ளார் பின்னர் தனது பண்ணைவீட்டிற்கு வரவழைத்து அவர்களை பாலியல் கொடுமை செய்துள்ளார்.

அதுபோன்று அவரது நண்பன் சபரிராஜனும் ஏராளமான இளம்பெண்களை மயக்கி, திருநாவுக்கரசுவின் காரில் பல இடங்களுக்கு அழைத்து செல்வார். பின்னர் அங்கு அவர்கள் சில்மிஷத்தில் ஈடுபடும்போது திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் மறைந்திருந்து வீடியோ எடுப்பர்.

பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி திருநாவுக்கரசு அந்தபெண்களை தனது பண்ணைவீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். மேலும் திருநாவுக்கரசின் இந்த செயலுக்கு அவருடன் படித்த தோழி ஒருவர் உதவியாக இருந்துள்ளார்.

ஏராளமான இளம்பெண்களின் செல்போன் எண்களை பெற அந்த பெண் உதவியாக இருந்துள்ளார். மேலும் அந்த பெண் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதை வைத்து நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். என கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறியுள்ளார்.