பெங்களூரு பி.டி.எம். லே-அவுட்டில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 32). இவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் ரமேஷ்க்கு ஆண்மை குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அவருடைய மனைவி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறி கணவனிடம் மற்றும் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் அவர்கள் அதை ஒருபோட்டாக நினைக்கவில்லை. மாறாக ரமேஷின் சகோதரர் மற்றும் நண்பருடன் உடலுறவில் ஈடுபடும்படி அவர்கள் அந்த பெண்ணிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு ரமேஷின் மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உணவில் மயக்க மருந்து கலந்து ரமேஷ் மனைவிக்கு கொடுத்தனர். அதை சாப்பிட்ட அந்த அவரது மனைவி மயங்கினார். இந்த வேளையில் அவர்கள் அந்தப்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்ணின் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச விடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். அத்துடன் அந்த பெண் விபசார தொழிலில் இருப்பதாக கூறி பேஸ்புக் பக்கத்தில் பிறருக்கு அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண் சைபர்கிரைம் காவல் துறையினரிடம் புகார் செய்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆபாச வீடியோ, படங்களை அழிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் ஈடுபட்டு வருகின்றனர்.