ஆசையாக சாப்பாடு ஊட்டிவிட்ட தாய், பரிதாபமாக உயிரிழந்த பச்சிளங்குழந்தை.!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ரோகேஷ். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா. மோனிஷ் என்ற 3 வயது பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் இரவு ராதிகா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு, அந்த பாத்திரங்களை வைப்பதற்கு உள்ளே சென்றுள்ளார்.

குழந்தையை வெளியே விட்டுவிட்டு சென்றநிலையில் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை அங்கில்லை. உடனே அவர் குழந்தை தெருவில் விளையாட சென்றிருக்கும் என எண்ணி வெளியே சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கும் குழந்தையை கனத்த நிலையில் வீடுமுழுவதும் நன்கு தேடி பார்த்துள்ளார்.

அப்பொழுது குளியலறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேனில் குழந்தை தலைகுப்புற கவிழ்ந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறிக்கொண்டே குழந்தையை தூக்கியுளளார்.

மேலும் கேனில் உள்ள தண்ணீரில் விழுந்ததில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அக்கம்பக்கத்தினர் ராதிகா குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட தாய் ராதிகா கதறி அழுதுள்ளார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.