ஒடிசா மாநிலம் பர்ஜங் மாவட்டத்தில் வசித்து வருபவர் சமீர் சிங். இவரது மகள் மான்சி.சமீபத்தில் மான்சிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை மார்ச் 13ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. மேலும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது
இந்நிலையில் மான்சியை தேதி வந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்ததும் பதறிப்போன நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறை விரைந்தனர்.
பின்னர் மான்சியை ஏன் கைது செய்தீர்கள் என போலீசாரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியுள்ளனர். அதாவது கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் மான்சி மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் பிரசாந்த் என்ற இளைஞருடன் தகராறு செய்து அவரை பிரசாந்தை கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதலை தொடர்ந்து நான்கு பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மான்சியையம் கைது செய்தனர், மற்றொரு பெண்ணை தேதி வருகின்றனர்.
இதை கேட்டு மான்சியை திருமணம் செய்துகொள்ளவிருந்த மாப்பிளை மற்றும் அவரது குடும்பத்தினர் மிரண்டு போயுள்ளனர். மிரண்டு போனார். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் திருமணத்துக்கு முன்னரே மான்சி ஒரு கொலை குற்றவாளி என தெரியவந்தது எங்களது நல்ல நேரம். தங்கள் மகன் வாழ்க்கை தப்பித்தது என கூறியுள்ளனர்.






