கோபத்தில் கொந்தளித்த நடிகை விஜயலக்ஷ்மி.!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த காமக்கொடூர மிருக கும்பலிடம் இளம்பெண் ஒருவர் சிக்கி கதறும் வீடியோ ஒன்று வெளியானது. மேலும் அது காண்போர் அனைவரின் உள்ளத்தையும் பதைபதைக்கும் வகையில் இருந்துள்ளது.

மேலும் அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துவந்த நிலையில் அந்த கும்பலில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக பிக்பாஸ் நடிகை விஜயலக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்துள்ளார்.