பாலியல் அடிமைகளாக யாஷிடி பெண் கைதிகள் கற்பழித்து கொலை செய்யப்படுவதற்கு ஐஎஸ் அமைப்பை சேர்ந்த ஒருவரின் மனைவி குர்ஆனின் விளக்கத்தை கொடுத்திருக்கும் வீடியோ காட்சியானது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பானது 2014 ல் வடக்கு ஈராக்கில் யாஷிடி மக்களின் நம்பிக்கை மையமான சின்ஜரின் மீது, தாக்குதல் நடத்தி அப்பகுதி மக்களை கைப்பற்றியது.
அவர்கள் அனைவரும் பிசாசுகளை வணங்குபவர்கள் எனக்கூறி ஆண்கள் மற்றும் வயதான பெண்களை கொலை செய்தனர். இதனை இனப்படுகொலை என ஐ.நா கடுமையாக கண்டனம் செய்தது.
ISIS wife on Yazidi sex slaves:
ISIS woman: If it’s in the Quran then who am I to question it?
Kurdish fighter: But is it in the Quran?
ISIS woman: I don’t know much about Quran pic.twitter.com/vOKPI4Kbho
— Afarin Mamosta (@AFAR1N) March 9, 2019
பின்னர் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளுக்கு ‘மனைவிகள்’ மற்றும் பாலியல் அடிமைகளாக இருக்க கட்டாயப்படுத்தினர்.
அந்த வரிசையில் ஒரு யாஷிடி பெண், 17ஐ.எஸ் பயங்கரவாத முதலாளிகளுக்கு அடுத்தடுத்து பாலியல் அடிமையாக மாற்றப்பட்டார். அதோடல்லாமல், அவருக்கு உணவளிக்காமல் புல்லை சாப்பிட வற்புறுத்தி கொடுமைபடுத்தினர். அதன்பிறகு பாக்தூஸ் இருந்து அவர் தப்பியோடினார்.
மற்றொரு சுவீடன் நாட்டு ஐஎஸ் போராளி, சண்டையிட செல்லும் சமயங்களில் எல்லாம், அடிமையாக வைக்கப்பட்டிருந்த யாஷிடி பெண்ணுக்கு உணவு எதுவும் கொடுக்காமல் வீட்டிலேயே அடைத்து வைத்து சென்றுவிடுவான்.
ISIS பிராந்தியத்திற்குள் நுழைந்த பிரிட்டிஷ் SAS துருப்புக்களின் கூற்றுப்படி, ஜிகாதிகள் டஜன் கணக்கான யாஷிடி பெண்களின் தலைகளை சிதைத்து குப்பை தொட்டிகளில் எறிந்துள்ளனர் என தெரிவிக்கிறது.
இந்த நிலையில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் யாஷிடி பெண்களின் வாழ்க்கை குறித்து, ஈராக் மற்றும் சிரியாவிற்கு வெளியில் இருந்து வந்ததாகக் கருதப்படும் அடையாளம் தெரியாத ஐஎஸ் அமைப்பை சேர்ந்த ஒருவரின் மனைவி பேட்டி கொடுத்துள்ளார்.
நாட்டின் வடக்கே குர்திஸ் கட்டுப்பாட்டுக்குள்ளான அகதிகள் முகாமில் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், போரில் கைதிகளாக இருப்பவர்கள் அடிமைகள் என குர்ஆனில் உள்ளது.
‘அவர்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவீர்கள், அது கற்பழிப்பு அல்ல. ஏனென்றால் அவர்கள் உங்களுடைய சொத்து. உங்கள் அடிமைகள்.’ என கூறுகிறார்.
இது குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா என பேட்டி எடுத்த பெண் கேட்டபோது, ‘குர்ஆனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது’ என சிரித்துக் கொண்டே அந்த பெண் பதிலளித்திருக்கிறார்.
குர்திஸ்தானில் இராணுவ முன்னேற்றங்கள் குறித்த செய்திகளை பகிர்ந்து வரும் அஃபர்ன் மமோஸ்டா, இதுசம்மந்தமான இரண்டு வீடியோக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.