7 பேர் விடுதலையை விட 7½ கோடி பேரின் விடுதலை முக்கியம்!! கமல்ஹாசன்

சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்று நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம், ” எங்கள் கூட்டணியில் நல்லவர்களுக்கு மட்டும் தான் இடம், எங்கள் கூட்டணி பலமான கூட்டணி, மக்களுடனான கூட்டணி தான் இது.

மக்கள் நீதி மையத்தின் தேர்தல் அறிக்கை விரைவில் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. 1137 மனு வந்திருக்கிறது. வருகிற 11,12,13,14,15 போன்ற தேதிகளில் நேர்க்காணல் நடைபெற உள்ளது.

விரைவில் வேட்பாளர்களை பற்றி முழு விவரம் வெளியிடப்படும். 7 பேர் விடுதலை குறித்து நாம் சட்டத்தில் குறுக்கிட இயலாது. வெளியிட வாய்ப்பு இருக்கிறது. சட்டம் தன் இயக்கப்படி இயங்க வேண்டும்.

7 பேரை பற்றி பேசுவதை விட 7½ கோடி பேரின் விடுதலை பற்றியும் பேச வேண்டும் என்பதுமக்கள் நீதி மையத்தின் விருப்பம். பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை. ஆனால், படிப்படியாக மதுவிலக்கு சாத்தியமாகும்.

நடிகர் ரஜினி நாடாளுமன்ற தேர்தலிலும், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என கூறி விட்டார். ஆனால், எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறோம்.” என அவர் கூறியுள்ளார்.