18 பவுண்டரிகள், 3 சிக்ஸ் அடித்த ஷிகர்.!!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.

இந்நிலையில் 4-வது ஒருநாள் போட்டி, இன்று மொகாலியில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அம்பதி ராயுடு, முகமது ஷமி, ஜடேஜா, டோனி நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக, கேஎல் ராகுல், சாஹல், புவனேஸ்வர் குமார் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் மற்றும் ஷிகர் தவான் ஆஸி., பந்து வீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதற அடித்தனர். மொத்தமாக இரண்டு பெரும் சேர்ந்து 25 பவுண்டிகளும், 5 சிக்ஸர்களும் அடித்தனர்.

ரோகித் ஷர்மா 92 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உடன் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 115 பந்துகளில் 18 பவுண்டரி, 3 சிக்ஸர் உடன் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போதுவரை இந்திய அணி 43 ஓவர்களில்,4 விக்கெட் இழப்பிற்கு, 301 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.