பிரித்தானியாவில் எச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு நலமுடன் அழகிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
லண்டனை சேர்ந்த அன்டோனியோ மார்சோகி (47) என்பவருக்கு 32 வயதில் எச்ஐவி நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேசமயம் அவர் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்பதால் 2017ம் ஆண்டு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த அன்டோனியோ, தனக்கு ஒரு குடும்பம் வேண்டும் என நினைத்து குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
ஆனால் தனக்கு எச்ஐவி இருப்பதால், அந்த தொற்று குழந்தையை சுமப்பவருக்கும், குழந்தைகளுக்கும் பரவி விடுமோ என்ற அச்சமும் இருந்துள்ளது.
நண்பர்கள் ஒருவரின் ஆலோசனைப்படி அமெரிக்காவிற்கு விரைந்து அங்குள்ள மருத்துவமனையில் ஆலோசனை பெற்றுள்ளார். அவர்கள் கொடுத்த அறிவுரையின் படி வாடகை தாயை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஒருவழியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கருமுட்டை கொடுக்க முன்வந்துள்ளார். அன்டோனியோவிற்கு எச்ஐவி தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மருந்துகள் கொடுக்கப்பட்டு, அவருடைய விந்தணுக்கள் அந்த பெண்ணின் கருமுட்டையில் செலுத்தப்பட்டது.
சிறிது நாட்களுக்கு பின் பரிசோதனை மேற்கொண்டபொழுது இரட்டை குழந்தைகள் இருப்பதை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
அதேசமயம் குழந்தை பிறந்ததும், இருவருக்கும் எந்த நோய்த்தொற்றும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது அன்டோனியோவை மகிழ்ச்சியில் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கிறது.
இதுகுறித்து பேசியிருக்கும் அன்டோனியோ, தற்போது என்னுடைய குழந்தைகள் பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். என்னுடைய உறவினர்கள் அனைவருமே தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
என்னுடைய அப்பா 7 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இப்போது அம்மாவும், தம்பியும் மட்டும் தான் ஒன்றாக இருக்கிறார்கள். என்னுடைய மகள்களின் நிறைய புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். நிச்சயம் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.