நடிகர் சிம்புவின் தம்பிக்கு திருமணம்?

நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 26 ஆம் திகதி திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இது நம்ம ஆளு படத்திற்கு குறளரசன் இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 26 ஆம் திகதி மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.