மௌனம் கலைத்த மைக்கேல் ஜாக்சனின் ரகசிய காதலி!

‘பாப்’ பாடல் உலகின் மன்னராக திகழ்ந்த அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பற்றி ‘Leaving Neverland’ என்ற ஆவணப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதற்கு முன்முறையாக அவருடைய ரகசிய காதலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், சிறுவயதில் தங்கள் இருவருக்கும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலை கொடுத்தார் என அவருடைய இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகியோர் சமீபத்தில் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மைக்கேல் ஜாக்சன் மீது பலரும் பாலியல் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு அவருடைய குடும்பத்தார் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜாக்சனின் நிர்வாக நிறுவனத்திற்காக பணியாற்றியவரும், ரகசிய காதலியுமான ஷனா குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் பரிதாபத்திற்குகூறிய விடயம். மைக்கேல் மீது குற்றம் சுமத்தியிருக்கும் இருவருமே அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். அவர்கள் மீது உண்மையான அக்கறையை காட்டினார்.

இருவரின் மீதும் அதிக அன்பு கொண்டிருந்தார். அது வெறும் தூய மற்றும் அப்பாவியான வழியில் மட்டுமே. அவர்கள் எல்லோரும் எதிர்த்து நிற்க வேண்டும் என அவர் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். அவருடன் இருந்தவர்களுக்கு உண்மையிலேயே ஒரு உலகை ஏற்படுத்தி கொடுத்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அவரை கொன்றுவிட்டன. ஜோர்டி சாண்ட்லரின் முதலாவது குற்றசாட்டு தான் இதற்கு ஆரம்பமாக அமைந்தது. அன்றிலிருந்தே அவர் மனதளவில் இறந்து விட்டார். மனஅழுத்தத்திலே காணப்பட்டார். அவருடைய கண்களில் எந்த தீங்கும் இருந்ததே இல்லை.

உங்கள் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளுக்கு உதவுவதற்கும், பாதுகாப்பதற்கும் அர்பணித்திருக்கும் போது, இந்த விடயங்களில் நீங்கள் குற்றம் சாட்டப்படுவதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?

அவரால் புரிந்துகொண்டு அதனை எதிர்த்து நிற்க முடியவில்லை. தன்னை அழிப்பதற்கு தனக்கு எதிராக ஒரு சதித்திட்டம் இருந்ததாகவே அவர் நினைத்தார்.

17 வயதில் ஒரு நிகழ்ச்சியின் போது நான் அவரை சந்தித்தேன். என்னுடைய 20 வயதில் எங்கள் இருவருக்குள்ளும் ஒரு ரகசிய காதல் இருந்தது. இளம் பையன்களை அவர் அதிகம் நேசித்தார். ஆனால் அதில் பாலியல் கிடையாது. ஆரம்பத்திலிருந்தே அவர் பெண்களை தான் அதிகம் நேசித்தார்.

இருவரும் செல்போனில் பேச ஆரம்பித்து பல மாதங்கள் கழித்து, உங்களுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என நான் கூறியதற்கு என்னை முத்தமிட்டார். ஆனால் அடுத்த சில வாரங்களில் அவர் லிசா மேரியை திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்தியை படித்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

ஒருநாள் நிச்சயம் இருவரும் ஒன்று சேர்வோம் என நான் நினைத்திருந்தேன். அதைபோலவே லிசா மேரியை அவர் விவாகரத்து செய்த பின்னர், எனக்கு அழைப்பு விடுத்தார். இருவரும் படத்திற்கு சென்றோம். ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம். அவர் பெண்கள் மீது தான் அதிக நெருக்கம் காட்டினாரே தவிர சிறுவர்கள் மீது அல்ல என்பதை வெளிப்படுத்துவதற்காகவே எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை பற்றி வெளியில் கூற முடிவெடுத்திருக்கிறேன் ஷனா கூறியுள்ளார்.