ரஷ்யாவில் தன்னுடைய குழந்தைகள் பிரித்து செல்லப்பட்டு கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டதால் மனம் நொந்துபோன தாய் 6 மாதம் கழித்து பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த அன்னா ஜுப்கோவின் கணவர், யரோஸ்லவ் ஒலினிகோவ் (28) தன்னுடைய 6 வயது மகள் வெரோனிக்காவை துஸ்பிரயோகித்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவருடைய வீட்டிற்கு அருகே வெரோனிகாவின் சடலத்தை பொலிஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது சிறுமி இறப்பதற்கு முன்னர் பலமுறை அவருடைய தந்தையால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் ஒலினிகோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியின் இறுதிச்சடங்கு முடிந்த சில நாட்களிலே பெற்றோருக்கான உரிமையை இழந்துவிட்டதாக கூறி, 27 வயதான அன்னாவிடம் இருந்து 3 குழந்தைகளும் பிரித்து ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
அன்றிலிருந்தே அதிக மனஅழுத்ததில் காணப்பட்ட அன்னா, குந்தைகளும், கணவனும் தன்னுடைய இருப்பதாய் போலவே கற்பனை செய்து வாழ்ந்துள்ளார். இந்த மனஅழுத்தத்தின் காரணமாக தன்னுடைய மார்பு தொற்றுநோயை கூட கவனிக்காமல் விட்டுள்ளார்.
இந்த நிலையில் அன்னா அந்த மனவிரக்தியிலேயே உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேசமயம் கைது செய்யப்பட்டிருக்கும் அவருடைய கணவருக்கு விரைவில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.






