லண்டனில் 60 கிமீ வேகத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில் ராயல் இலவச மருத்துவமனை அருகே வைக்கப்பட்டிருந்த 4 மாடி சாரைக்கட்டு மளமளவென சரிந்து விழுந்துள்ளது.
லண்டனில் இன்று மதியம் 60கிமீ வேகத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில், ராயல் இலவச மருத்துவமனை அருகே வைக்கப்பட்டிருந்த 4 மாடி சாரைக்கட்டு திடீரென மளமளவென சரிந்து விழுந்துள்ளது.
இதில் 200மீ சுற்றளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக சாலை மூடப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற ஆரம்பித்தது.
இந்த சம்பவம் அறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 குழுக்கள் கொண்ட மீட்பு படையினரும் விரைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களும் விரைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தை நேரில் பார்த்த ஜே ஹெய்த் (42) என்பவர் கூறுகையில், நான் அப்பொழுது தான் பேருந்திலிருந்து இறங்கினேன். அது ஒரு வெடிகுண்டு சத்தத்தை போல் இருந்தது. அதிகமான புகை அப்பகுதியை சூழ ஆரம்பித்தது. ஒரு சிறுமி அந்த வழியிலிருந்து என்னை தள்ளிவிட்டார்.
நான் அந்த சாரைக்கட்டு விழுவதை முழுதுமாக பார்த்தேன். சாலை முழுவதையும் அது ஆக்கிரமித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.






