கிடுக்குபிடி விசாரணையில் சமூக வலைதள செயலிகள்.!!

ஐரோப்பிய நாட்டில் இருக்கும் யூனியன் பிரேதேசத்தில்., அந்நாட்டின் அரசு குறிப்பிட்ட விதியை மீறி முகநூல் நிறுவனம் செயல்பட்டதாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன் படி முகநூல் நிறுவனத்தின் மீது ஏழு குற்றசாட்டுகள்., வாட்சப் நிறுவனத்தின் மீது இரண்டு குற்றசாட்டுகள்., இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மீது ஒரு குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளவுள்ளது. இதுமட்டுமல்லாது., ஆப்பிள் மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது இரண்டு குற்றச்சாட்டும்., லிங்கின் நிறுவனத்தின் மீதும் ஒரு குற்றசாட்டு பதிவாகியுள்ளது.

இந்த குற்றசாட்டுகள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு., அதற்கான தேர்வுகள் அனைத்தும் இந்த வருடத்தின் இறுதிக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்., பொதுமக்களின் தகவல் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விதிகளை நிறுவனங்கள் பின்பற்றுகிறதா என்று கண்காணிப்பதுதான் எங்களின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து டிசம்பர் இறுதி காலம் வரை தகவல் பாதுகாப்பு குற்றசாட்டுகளை பெற்ற தகவல் பாதுகாப்பு ஆணையம் சுமார் 2864 குற்றசாட்டுகளை பெற்றுள்ளது. மேலும்., பயனர் விபரங்களை கையாண்டதாக எழுந்த குற்றசாட்டுகள் முகநூல் மற்றும் வாட்சப் பயனர்களின் விபரங்களை பகிர்ந்துகொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த விஷயம் குறித்த விசாரணையானது தற்போது நடைபெற்று வருகிறது.