கொப்பளங்கள்…. கொப்பளிக்க விடாமல் தப்பிப்பது எப்படி?

இன்றுள்ள காலத்தில் வெயிலின் தாக்கமானது வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நமது உடலின் தட்ப வெப்பமானது வெகுவாக அதிகரிக்கப்பட்டு., உடலின் நீர் வற்றி., உடலின் வெப்பம் அதிகரித்து., அதனால் பருக்கள் போன்ற கொப்பளங்கள் தலையில் ஏற்படுவது உண்டு. இந்த கொப்பளங்கள் அதிகளவு வெப்பம் மற்றும் கிருமிகளின் காரணமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

அனைத்து இடங்களிலும் செழித்து காணப்படும் வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு நீரில் நன்றாக கொதிக்கவிட்டு., அந்த நீரை வடிகட்டி., நமது தலையை அலசி அல்லது தலையில் தேய்த்து குளித்தால் தலையில் இருக்கும் கொப்பளங்கள் அனைத்தும் மறைந்துவிடும். இந்த முறையை வாரத்திற்கு மூன்று நாட்கள் மேற்கொள்வது நல்லது.

வெந்தயம் குளிர்ச்சியை தரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே., அந்த வங்கியில்., வெந்தயத்தின் இலைகளை நீர் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து., தலை நன்றாக காய்ந்தவுடன் தலையை அலசினால்., உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். இதன் மூலமாக உடலின் சூடானது குறைந்து கொப்புளங்கள் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்ய வேண்டும்.

எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் நமது உடலுக்கு குளிர்ச்சியையும்., மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரும். இதன் மூலமாக எலுமிச்சை சாறுடன் சிறிதளவு நீரை சேர்த்து தலையில் தேய்த்து., 20 நிமிடங்கள் கழித்த பின்னர் தலையை அலசினால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.

முடிந்தளவு கோடை காலங்களில் அதிகளவு நீரை அருந்தவேண்டும்., காலை மற்றும் மாலை வேளைகளில் குளிப்பது., இதமான தட்ப வெப்ப நிலையில் இருக்கும் நீரை அருந்துவது., உடலுக்கு குளிர்ச்சியை வழங்கக்கூடிய பழச்சாறுகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது. இதன் மூலமாக உடலின் வெப்பமானது குறைக்கப்படும் அல்லது வெப்ப நிலை சீர்செய்யப்படும்.