ராகுலும் இல்லை.. மோடியும் இல்லை..! நான் தான் அடுத்த பிரதமர்.!!

வரும் 17 வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ளது. தேர்தல் நடத்தப்படும் தேதிகள் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும் தெரிகிறது. வரும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஒன்பது முதல் பத்து கட்டங்களாக நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்றும், பிரதமர் வேட்பாளராக மோடியும்-ராகுலும் நேரடியாக களம் இறங்குவார்கள் என்றும் அதே சமயத்தில் மூன்றாவதாக ஒரு அணி அமைய வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் கடைசியாக நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் தான். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

இதன் எதிரொலியாக வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி பெற வாய்ப்புகள் வாய்ப்பு இருப்பதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ்-பாஜக இரண்டுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும், மாநில கட்சிகளின் கைகள் தான் இந்த தேர்தலில் ஓங்கியிருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சொல்லப் போனால் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு மாநிலக் கட்சிகளுக்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரதமர் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அகிலேஷ் யாதவ் விளக்கமளிக்கையில், ”பிரதமர் மோடி மீது உண்டான பயத்தினால் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ்யும் கூட்டணி அமைத்து இருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை. அது தவறானதாகும்.

அரசியலமைப்புச் சாசனத்தை காப்பாற்றவே இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த முறை மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று என் தந்தை மூலம் சிங் வாழ்த்து தெரிவித்தார். அது நடக்கவில்லை தற்போது பிரதமராக இருக்கும் மோடி அவர்களையும் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று எனது தந்தை வாழ்த்தியுள்ளார். அதனால்…” (அதோடு புன்னகையை மட்டுமே பதிலாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்).

தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், ”பிரதமர் வேட்பாளராக நான் களமிறங்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை. பிரதமராக நான் விரும்பவும் இல்லை. ஆனால், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதிய பிரதமர் பதவி ஏற்றால் மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.