மைத்துனி மீது ஆசை! புதுமாப்பிள்ளை செய்த திடுக்கிடும் செயல்…

தமிழகத்தில் திருமணமான 15வது நாளிலேயே மைத்துனியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த புது மாப்பிள்ளையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் தேர்வழி கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கு கடந்த 15-ஆம் திகதி ரூபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த 27ஆம் திகதி ரூபாவின் 13 வயது வயது தங்கையை காணவில்லை.

இது குறித்து பொலிசாரிடம் புகார் தரப்பட்ட நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில் புதுமாப்பிள்ளையான அஜித்குமார், சிறுமியை பைக்கில் அழைத்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அஜித்குமாரிடம் விசாரிக்கப்பட்டது.

அப்போது ஒரு வீட்டில் அந்த சிறுமியை அடைத்து பலாத்காரம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து சிறுமியை மீட்ட பொலிசார் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருமணமான 15வது நாளில் மைத்துனியை அஜித்குமார் பலாத்காரம் செய்தது அவர் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.