இந்தியாவின் அசாத்தியமான, அபார வெற்றி.!!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 ஒரு நாள் தொடர் போட்டி தொடங்கி உள்ளது. முதல்ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது. ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கலர் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்து, ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மறுமுனையில் உஸ்மான் அதிரடியாக ஆடி 50 ரன்கள் எடுத்தபோது, குல்தீப் யாதவ் பந்தில், விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதனை அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 37 ரங்களுக்கும், பீட்டர் 19 ரன்களுக்கும், டர்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் மட்டும் தனது அதிரடி ஆட்டத்தால் 40 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது.

இந்திய பந்து வீச்சை பொறுத்தவரை முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இதனையடுத்து இந்திய அணி 237 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினார். ரோகித் சர்மா 66 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தது.

கொஞ்சம் நிதானமாக ஆடிய விராட் 44 ரன்கள் எடுத்தபோது சம்பா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டானார். அடுத்து அம்பத்தி ராயுடு 13 வருடங்களுக்கு அவுட்டாக, எம்.எஸ் டோனி உடன் கேதர் ஜாதவ் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர்.

அதிரடியாக ஆடிய கேதர் ஜாதவ் 81 ரன்கள் எடுத்துள்ளார். எம் எஸ் தோனி 59 ரன்களை எடுத்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 25 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணியை, சரிவில் இருந்து மீட்டு, கேதர் ஜாதவ் எம் எஸ் டோனியும் தங்களது நிதானமான ஆட்டத்தினால் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.