நம்மில் எல்லோருக்குமே கூந்தல் பளபளவென இருக்க வேண்டும் என ஆசை உள்ளது.
தற்போது சந்தைகளில் கூந்தல் பராமரிப்பிற்கான பலவித பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் அது நமது கூந்தலுக்கு உதிர்வு, வறண்ட தலைமுடி, பொடுகு போன்ற பல வித பிரச்சினைகளை கூந்தலுக்கு ஏற்படுத்தி விடுகின்றது.
இந்த பிரச்சினைகளின்றி இயற்கை முறையில் கூந்தலை எப்படி பளபளவெனவும் ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்ள உதவுகின்றது.
தேவையானவை
- வாழைப்பழம்
- தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
- கற்பூரம் – 1
செய்முறை
ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீளமான கூந்தல் என்றால் இரண்டு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளவும்.
வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வாழைப்பழ விழுதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
வறண்டு அழுக்காக இருக்கும் தலையை சுத்தம் செய்ய, தேவைப்பட்டால் ஒரு சிறு கற்பூரத்தை இந்த கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
பின்னர் இந்த கலவையை உங்கள் உச்சந்தலை, கூந்தல் வேர் மற்றும் முழு நீள கூந்தலில் தடவவும்.
அரை மணி நேரம் இந்த கலவை உங்கள் கூந்தலில் ஊறட்டும். பிறகு வழக்கமான ஷாம்பூ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட சீயக்காய் கொண்டு தலைமுடியை அலசவும்.
இவ்வாறு செய்வதனால் கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சியையும் பளபளப்பையும் திரும்ப தருகின்றது.