உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி?

நமது உடல் இயங்கிக்கொண்டிருக்க எப்போதும் வெப்பம் தேவை. சராசரி உடல் வெப்பநிலை 36.5 – 37.5 degrees Celsius. இந்த வெப்பத்தின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்படும்.

உடல்வெப்பம் அதிகரிக்க காரணங்கள்

* போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் கூட உடல் வெப்பமடையும்.

* கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடலில் வெப்பம் கூடும். வியர்வை மூலம் உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும்.

* புரோட்டின் நிறைந்த உணவுகள் வெப்பத்தை வெளியேற்றும் அதனால் உடல் வெப்பமடையும்.

* செரிமான கோளாறுகள் கூட உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது.

உடல் வெப்பமடைந்ததற்க்கான அறிகுறிகள்

* கண்கள் எரிச்சல்

* சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

* அசிடிட்டி

உடல் வெப்பத்தை தணிப்பது வெகு சுலபம். உணவின் மூலமாக உடல் சூட்டை தணிக்கலாம். பாட்டி வைத்தியம் என்றாலும் பக்க விளைவுகள் இல்லாத உடனடி நிவாரணம்.

* கரண்டியில் நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதை சூடு செய்யவேண்டும். எண்ணெய் சிறிது சூடான உடன் அதில் தோல் உரித்த பூண்டு மற்றும் ஒரு மிளகை போட்டு சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு எண்ணெயை ஆறவைத்து வலது மற்றும் இடது காலின் பெருவிரல் நகத்தின் மேல் மட்டும் இந்த எண்ணெயை தடவ வேண்டும். சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து எண்ணெயை கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சில நிமிடங்களில் உடல் சூடு குறையும்.

 

* வெந்தயம் உடல் சூடு குறைய பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு ஊறவைத்த வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கினால் உடல் சூடு குறையும்.

* குளிர்ந்த பாலில் தேன் கலந்து பருகலாம்.

* புதினா, எலுமிச்சை, தேன் கலந்து குடிப்பது கூட நல்லது.

* நீராகாரம் அதாவது பழைய சோற்றில் நீர் விட்டு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சூடு குறையும்.

* பசலைக்கீரை, வெள்ளரிக்காய், இளநீர், காலிபிளவர், தயிர், தர்பூசணி, மாதுளை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். நிறைய சுத்தமான தண்ணீர் குடிப்பதும், நீர்சத்து மிகுந்த காய்கறிகளும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.