வட அயர்லாந்து பகுதியில் தன்னை பார்க்க வந்த 5 மாத குழந்தையை பார்த்து கேட் கொடுத்திருக்கும் பதிலால் அரச குடும்ப ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.
பிரித்தானிய இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியினருக்கு ஏற்கனவே சார்லோட், ஜார்ஜ் மற்றும் லூயிஸ் என்கிற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வட அயர்லாந்தில் Ballymena பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற இளவரசி கேட், அங்கு நின்று கொண்டிருந்த அரச குடும்பத்து ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் பேசினார்.
அப்போது ஆலன் என்பவர் வைத்திருந்த 5 மாத கைக்குழந்தையை கொஞ்சிய கேட், இவன் மிகவும் அழகாக இருக்கிறான். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறான் என கூறினார்.
அதனை கேட்ட ஆலன், 4வது குழந்தை பிறக்க போகிறதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்தபடியே பதிலளித்த கேட், “வில்லியம் கொஞ்சம் கவலைப்படுவார் என் நான் நினைக்கிறேன்.” என கூறிக்கொண்டே அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
ஆனால் இந்த செய்தி வெளியானதை அடுத்து அரச குடும்ப ரசிகர்கள் பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை சமூகவலைத்தளத்தின் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.