பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கிய உள்ள இராணுவ விமானி அபிநந்தன் என்பது உறுதியாகியுள்ளது. இவர் தாம்பரம் ஏர் போர்ஸில் பயிற்சி பெற்றவர் என்றும், தாம்பரத்தில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அவரை பாகிஸ்தானிடம் இருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அபிநந்தனிடம் பாக்., இராணுவ அதிகாரி ஒருவர் கேக்கும் கேள்விகளுக்கு துணிச்சலுடன் பதில் அளிக்கும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அபிநந்தனிடம் பாக்., இராணுவ அதிகாரி, ”உங்கள் தாக்குதலின் திட்டம் என்ன?, நீங்கள் வந்த விமானம் எந்த வகையை சேர்ந்தது? நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர்” என்று எழுப்பிய கேள்விக்கு, ”நான் இந்தியாவின் தென் பகுதியை சேர்த்தவன். என் உயிர் போனாலும் என் தாய் நாட்டின் ரகசியங்களை தெரிவிக்க மாட்டேன்” என்றும் அபிநந்தன் பதிலளித்துள்ளார்.
பாக்., இராணுவ கேள்வி: எங்களுடன் இப்போது இருப்பதைப்பற்றி எப்படி உணர்கிறீர்கள்?
அபிநந்தன் பதில்: கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டது முதல் தற்போது வரை அவர்கள் என்னை நன்றாக, கண்ணியமாக கவனித்து வருகின்றனர். நான் இந்திய சென்ற பின் இதையே தான் சொல்வேன், மாற்றி கூற மாட்டேன். மேலும், இதே கண்ணியத்துடன் அவர்களையும் நாம் நடத்த வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவிப்பேன்”
பாக்., இராணுவ கேள்வி: இந்த தேநீர் நன்றாக உள்ளதா?
அபிநந்தன் பதில்: மிக அருமையாக உள்ளது.
இப்படியாக பாக்., இராணுவ வீரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அபிநந்தன் தன் துணிச்சலான பதிலை கூறும் இந்த காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் டிவிட்டர் ட்ரண்டில் #AbhinandanMyHero (எனது கதாநாயகன் அபிநந்தன்) முதல் இடத்தில பிடித்து வருகிறது.