காதலிக்க மறுத்த மாணவி! பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன்!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த மாணவி பி.டெக் படித்து வருகிறார். சென்னாரம் கிராமத்தைச் சேர்ந்த அவினாஷ் என்பவர் அவரை ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது.

கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி, கல்லூரியின் பெண்கள் விடுதியில் தன் தோழியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அக்கல்லூரியில் படிக்கும் பட்டதாரி மாணவரான அவினாஷ், அந்த மனைவியை பேருந்து நிலையத்தில் சந்தித்து பேச முயற்சித்துள்ளார்.

ஆனால் அவினாஷை கண்டு கொள்ளாமல் அந்த மாணவி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவினாஷ் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது.

உயிருக்குப் போராடிய மாணவியை பொதுமக்கள் காப்பாற்றினர். அந்த மனைவி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்னுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவினாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலை காதல் பிரச்சணையில் இச்சம்பவம் நடைபெற்றதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது.