எல்லையில் போர் பதற்றம் உச்சகட்டம்.! பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பு.!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தது. மேலும், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முகாம்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது.

இந்திய விமான படை நடத்திய இந்த பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்களை பாலி கொடுத்து இந்திய பழி தீர்த்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்பதால் இந்திய எல்லைகளில் உள்ள நமது இராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் பதில் தாக்குதலுக்கு பின், இந்திய பிரதமர் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட்டார். அதேபோல் பாகிஸதான் பிரதமரும் அவசர ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே இந்திய நடத்திய பதில் தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று அறிவித்தது.

இந்த நிலையில், சற்றுமுன் இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் நுழைந்து குண்டு வீசியுள்ளது. இந்திய ராணுவம் முகாமிட்டு இருந்த பகுதி அருகே வீசியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவம் இந்தியா போர் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் வெளியான தகவலின் படி, காஷ்மீரில் 4 இடங்களில் பாக். விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சேதம் எதுவும் இல்லை. இந்திய விமானப்படையின் எதிர் தாக்குதலால், பாக். போர் விமானம் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் விழுந்து நொறுங்கி உள்ளது. இந்தியா இராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் F -16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டின் ராணுவ அதிகாரி ஆசிஃப் கஃபூர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”நான்கு இடங்களில் பாகிஸ்தான் குண்டு வீசி உள்ளது. இந்திய விமானங்கள் இரண்டை சுட்டு வீழித்துள்ளோம், அதில் ஒரு விமானம், காஷ்மீர் பகுதியிலும், மற்றொன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் வீழ்ந்துள்ளதாக” அறிவித்துள்ளார். மேலும், இந்திய இராணுவ வீரர் ஒருவரையும் பாகிஸ்தான் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த பதற்றமான சூழ்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் உள்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.