ஆதாரங்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த இந்தியா!

புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா ஒப்படைத்துள்ளது.

பிப்ரவரி 14 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கிடையே பிரச்சனை நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை இந்தியா சம்மன் கொடுத்து அழைத்தது. அப்போது அவரிடம் புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா வழங்கியுள்ளது.

இனியாவது அவர்கள் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.