தலையில் முக்காடு போடவைக்கும் தங்கத்தின் விலை!

கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.26 ஆயிரத்தை விட அதிகமாக அவ்வப்போது விலையேற்றத்தை கண்டு வருகிறது. தங்கம் மக்களுக்கு அத்தியாவசிய தேவை அல்ல. ஆனால் ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்துவைக்க நகைவாங்குவதற்கு மிகவும் தடுமாறி வருகின்றனர். வரதட்சணை கேட்பது தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், மணப்பெண்ணுக்கு தங்கம் கொடுப்பது வழக்கமாக மாறிவிட்டது.

சென்னையில் இன்று, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.25,456-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,184 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,472-க்கும் விற்கப்படுகிறது.

அதேபோல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,331 ஆகவும், சவரனுக்கு ரூ.26,648-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம்43.50 காசுகளுக்கும், ஒரு கிலோ ரூ.43,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.