கர்ப்பிணி பெண் மரணத்தில் அதிரடி திருப்பம்!

கனடாவில் 20 வார கர்ப்பிணி இளம்பெண் மரணத்தில் அவரது கணவருக்கு பங்கில்லை என நீதிமன்றத்தில் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

குறித்த கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது அவரது மரணம் அதிர்ச்சி தரும் விபத்தாக இரிக்கலாம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கிறிஸ்தவ மத போதகரான பிலிப் கிராண்டின் தமது கள்ளத்தொடர்பை முன்னெடுத்து செல்ல, தமது கர்ப்பிணி மனைவி அன்னா கரிசாவுக்கு ரகசியமாக போதை மருந்து அளித்திருக்கலாம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மட்டுமின்றி போதை மருந்தின் தாக்கத்தில் இருந்த அவர் தன்னிலை மறந்து குளிக்க பயன்படுத்தும் தொட்டியில் நிரப்பப்பட்ட தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பிலிப் கிராண்டினுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் கற்பனை கதை மட்டுமே எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கின் இறுதிகட்ட விவாதத்தில், பிலிப் கிராண்டின் அவரது மனைவிக்கு ரகசியமாக போதை மருந்து அளித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என அவரது வழக்கறிஞரான அமித் தாக்கோர் தெரிவித்துள்ளார்.

அன்னா கரிசா பயன்படுத்தி வந்ததாக கூறும் போதை மருந்தானது, அவரே இணையத்தின் வாயிலாக வரவழைத்து பயன்படுத்தி இருக்கலாம் எனவும், இதற்கும் பிலிப் கிரண்டினுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமித் தாக்கோர் வாதிட்டுள்ளார்.

அன்னா கரிசா மரணமடைந்துள்ளது விபத்தாக இருக்கலாமே தவிர அது கொலை அல்ல எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.