தொடரும் குள்ள மனிதர்களின் சர்ச்சை!

குள்ள மனிதர்களின் மலம் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட உள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹாவிலச்சிய பகுதியின் வீடு ஒன்றில் குள்ள மனிதர்கள் சஞ்சரித்ததாக பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் அறிவித்துள்ளனர்.

அந்த இடத்திற்கு விரைந்த அநுராதபுரம் பொலிஸார் அசாதாரணமாக காணப்பட்ட மனித மலத்திற்கு நிகரான ஓர் பொருளை கண்டு பிடித்துள்ளனர்.

குள்ள மனிதர்களின் மலம் என கருதப்படும் பொருட்கள் இரசாயன பகுப்பாய்விற்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு குள்ள மனிதன் மஹாவிலச்சிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமத்திற்கு சென்றதாகவும், அங்கிருந்த பெண் ஒருவர் இந்த குள்ள மனிதனை பார்த்து அச்சமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தந்திரிமலை பகுதியிலும் குள்ள மனிதன் ஒருவனை பெண் ஒருவர் கண்டு பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு அடி உயரமான குள்ள மனிதனை கண்டதாக பெண்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.