செவ்வாய் கிரகத்தில் ஏலியன் கோவில்.! நாசா அதிர்ச்சி புகைப்படங்கள்..!!

பூமியை தவிர உள்ள கோள்களில் மனிதன் வாழ முடியும் என்ற முயற்சியில் அறிவியல் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்., செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்த ஆராய்ச்சியில் நாசா ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி சோதனை செய்து வருகிறது. செவ்வாயின் மேற்பரப்பில் நிலவும் சூழல்., தட்ப வெப்ப நிலை மற்றும் மண் மாதிரிகளை தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில்., செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் கோவில்கள் இருப்பதாக நாசா வெளியிட்ட புகைப்படத்தின் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த கோவிலானது மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது சிதைந்து இருக்கும் இந்த கோவிலின் புகைப்படமானது., நாசாவின் ரோவர் விண்கலம் மூலமாக தெரியவந்துள்ளது.

தற்போது இதற்கான புகைப்படங்கள் நாசாவால் வெளியிடப்பட்டுள்ளது. ரோவர் விண்கலத்தின் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில்., மலை உச்சியின் மீது பெரிய கட்டிடம் இருப்பதையும்., இந்த கட்டிடத்தை ஏலியன்கள் கட்டியிருக்கலாம் என்றும்., இந்த கட்டிடமானது ரெட் பிளானட் காலத்தில் வாழ்ந்திருந்த ஏலியன்கள் கட்டியிருக்கலாம் என்று அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பிரபல ஆராய்ச்சியாளரான ஸ்காட் சி வாரிங் தெரிவித்தாவது., நாசா அமைப்பின் ஏலியன் குறித்த பழங்கால அமைப்பை மீண்டும் ஆராய்ச்சி செய்யலாம் என்று தெரிவித்தார். இவருடைய யூ.எப்.ஓ தளத்தில் கூறியிருப்பதாவது., ரோபர் விண்கலம் மூலமாக கிடைக்கப்பெற்ற புகைப்படத்தில் இருக்கும் காட்சியில் மலைப்பகுதியில் கட்டப்பட்டு இருந்த பழங்கால கோவில் ஒன்று தென்பட்டது. இந்த கோவிலானது ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட நிலைகளில் இருந்திருக்கிறது. இதனை காணும் போது பிரமீடு போலவும் காட்சியளிக்கிறது.

இந்த தகவல்கள் அனைத்தும் நாசா விண்வெளி மையத்திற்கு ரோவர் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள நிலையில்., விண்வெளி குறித்த தகவலை தொடர்ந்து நாசா வெளியிட்டு வருகிறது. செவ்வாயின் மேற்பரப்பின் உண்மை நிலை பற்றி நாசா கூறியுள்ளது., மக்களை அறியாமையில் இருந்து வெளிக்கொண்டு வரும்., ரோவர் விண்கலம் அனுப்பியுள்ள அனைத்து தகவலும் உண்மையாகவும் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும்., அங்குள்ள இடம் மலைப்பாங்கான இடம் என்பதால்., பாறையின் மேற்பரப்பாக இருக்க கூடும் என்ற கருத்தும் பலரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.