இயக்குநர் ஆதங்கம்… தேவ் பட தோல்விக்கு யார் காரணம்?

கடந்த பிப் 14 ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் தேவ். கார்த்தி ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடித்த இந்த படம், பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியை ச்நதித்தது. மேலும் வெளியான மூன்றே நாட்களில் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து இந்த படம் தூக்கப்பட்டது. அனேகமாக கார்த்தியின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு மோசமான அனுபவமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு யார் காரணம் என கூறிய படத்தின் இயக்குநர் ரஜத் இந்த படத்தை தான் நினைத்தபடி இயக்க கார்த்தி சுதந்திரம் அளிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் தேவ் படத்தில் கார்த்தியின் தலையீடு அதிகம் இருந்ததாகவும், இயக்கம், எடிட்டிங் , மற்றும் மிக்சிங் உள்பட அனைத்து துறையிலும் கார்த்தியின் தலையிடு இருந்ததாகவும், அவரே களமிறங்கி பல பணிகளை அவர் இஷ்டத்திற்கு பார்த்ததாகவும், இதனால் படத்தின் இயக்குநர் ரஜத் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது

இதனையடுத்து இந்த படம் கற்றுக்கொடுத்த பாடத்தினால், இனிமேல் நடிப்பு தவிர வேறு எந்த துறையிலும் தலையிடுவதில்லை என கார்த்தி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி சில ஆண்டுகள் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.