மது அருந்துபவர்களே உஷார்!! இதை கவனித்துள்ளீர்களா?

அசாம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோல்ஹாட் மாவட்டத்தில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இப்பகுதியில் நேற்று ஒரு திருமணவிழா நடந்தது. அப்போது அங்கு கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அங்குள்ள தோட்ட தொழிலாளர் ஒருவர் வாங்கி குடித்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதே போல் நிறைய பேர் அதா சாராயத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளனர்

மொத்தமாக 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆனால், அனைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அந்த பகுதியின் சட்டசபை உறுப்பினர் மிருனாள் சைக்கியா சம்பவ இடத்துக்கு சென்று கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போலீசாரை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்களில் இருந்து தப்பிக்க மது அருந்துபவர்கள் பரிசோதிக்கப்பட்ட, பானங்களை தேர்ந்தெடுப்பது நல்லது.